தக் லைஃப் படத்தில் 'சுகர் பேபி' சர்ச்சை...!

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான சுகர் பேபி உறவு பேசுபொருளாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் டிரைலர் கடந்த மே.17ஆம் தேதி வெளியானது. அதில் நடிகை த்ரிஷாவுடன் கமல் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், படத்தின் 2-ஆவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் த்ரிஷாவை குறிப்பிட்டு சுகர் பேபி (Sugar Baby) என்ற பாடல் இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுகர் டாடி என்பது இளம் பெண்ணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் வயதான ஓர் ஆணை குறிப்பதாகும்.அதேபோல் சுகர் பேபி என்பது வயதான ஆணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் ஒரு பெண்ணைக் குறிப்பதாகும். இந்த நவீன யுகத்தில் குறிப்பாக நகரங்களில் இந்த சுகர் டாடி, சுகர் பேபி கலாசாரங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தக் லைஃப் படத்தில் இந்த சுகர் பேபி விஷயம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.