சுமோ படத்தின் `ஆழியே' பாடல் ரிலீஸ்...!

மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படத்தின் `ஆழியே' பாடல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் ‘சுமோ’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
The calm before the Sumo storm!#Aazhiye – a soul-soothing 🥰melody by @nivaskprasanna is out now.
— Vels Film International (@VelsFilmIntl) April 22, 2025
▶️ https://t.co/4lmyQTXmta#Sumo in theatres from 25th April!@IshariKGanesh @VelsFilmIntl @sphosimin @actorshiva @sumoActor @priyaanand @DirRajivMenon @cinemainmygenes @Ashkum19… pic.twitter.com/BMN2cEscOW
இந்நிலையில் சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஜப்பானிய சுமோ வீரர் கதாநாயகன் சிவாவிடம் இருக்கிறார். இவரை எப்படி அவர் மிண்டும் ஜப்பானில் நடக்கும் சுமோ பந்தயத்தில் போட்டியிட உதவுகிரார் போன்ற காட்சிகள் டிரெய்லரில் நகைச்சுவையான பின்னணியில் இடம் பெற்றுள்ளது. படத்தின் பாடலான ஆழியே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன்ராஜன்,தீப்தி ரெட்டி வரிகளில் நரேச்ஜ், ஹெவின் ,நித்யஸ்ரீ மற்றும் ரோஸ் வெரோனிகா இணைந்து பாடியுள்ளனர்.