சந்தானம் படத்தில் நடிக்கும் சன் மியூசிக் விஜே!

சந்தானம் படத்தில் நடிக்கும் சன் மியூசிக் விஜே!

சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் சன் மியூசிக் விஜே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சந்தானம் படத்தில் நடிக்கும் சன் மியூசிக் விஜே!

கே ஜான்சன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘A1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சந்தானம், மீண்டும் கே. ஜான்சனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

‘பாரிஸ் ஜெயரா’ஜ் என தலைப்பிட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். காவியத் தலைவன், செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் சன் மியூசிக் சேனலில் விஜே வாக இருந்த சஸ்திகா ராஜேந்திரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிறார்.

இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் வடசென்னையைச் சேர்ந்த கேங்க்ஸ்டராக சந்தானம் நடிக்கிறார். மேலும் படத்தின் போஸ்டரில் சந்தானம் கையில் ஒரு மைக்குடன் காணப்படுகிறார். இதனால் படத்தில் சந்தானம் ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளர் ஆக இருக்கலாம் என தோன்றுகிறது. அதனால் தான் என்னவோ ஹாரிஸ் ஜெயராஜ் பெயரை கொஞ்சம் உல்டா செய்து பாரிஸ் ஜெயராஜ் என்று வைத்துவிட்டார்கள் போல.

Share this story