அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் மாஸ் அப்டேட்-ஐ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்...!

atlee

அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ‘ஜவான்’ இந்தி திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. அதேபோல அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டு பேரும் வசூல் ரீதியாக தங்களது கடைசி படங்களில் பிரமாண்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.


இந்நிலையில் இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அல்லு அர்ஜுனும், அட்லியும் அமெரிக்கா செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு விஎஃப்எக்ஸ் செய்த ஸ்டூடியோக்களில் இந்தப் படத்துக்கு விஎஃப்எக்ஸ் செய்ய இருப்பதை வீடியோ உணர்த்துகிறது.

Share this story