க்ரைம் த்ரில்லர் படத்தில் சுனைனா.. ‘ரெஜினா’ படத்தின் டிரெய்லர் குறித்த புதிய அறிவிப்பு !
சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல நடிகையாக இருக்கும் சுனைனாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெஜினா’. இந்த படத்தில் மாறுப்பட்ட நடிப்பை சுனைனா வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இந்த படத்தை இயக்கியுள்ளார். ரெஜினா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இந்தப் படத்தின் கதை. த்ரில்லர் டிராமா வகையை சேர்ந்த இந்த படதை எல்லோ பியர் புரொடக்ஷன் எல்எல்பி நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சதீஷ் நாயர் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகிறது.