சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ஒன் 2 ஒன்

சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ஒன் 2 ஒன்

சுந்தர் சி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் படத்திற்கு ஒன் 2 ஒன் என தலைப்பு வைக்கப்பட்டு, போஸ்டரையும் வௌியிட்டுள்ளது படக்குழு..

தலைநகரம் 2 படத்திற்கு பிறகு சுந்தர். சி நடிக்கும் புதிய படத்தை கே.திருஞானம் எழுதி இயக்குகிறார். இவர் ‘த்ரிஷா’ நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார் அனுராக். இப்படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 

சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ஒன் 2 ஒன்

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், படத்திற்கு ஒன் 2 ஒன் தலைப்பு வைத்து, முதல் தோற்றத்தையும் படக்குழு வௌியிட்டுள்ளது

Share this story