7வது முறையாக ஒன்றிணையும் சுந்தர் சி- ஹிப் ஹாப் தமிழா கூட்டணி...!

'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் மூலம் சுந்தர் சி- ஹிப் ஹாப் தமிழா ஆதி கூட்டணி 7வது முறையாக ஒன்றிணைகின்றனர்.
நடிகை நயன்தாரா நடிக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க, இப்படத்திற்கு சுந்தர் சி -யின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைகிறார்.
இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் மத்திய அமைச்சர் எல். முருகன், நடிகர் ரவி மோகன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா, அபிநயா, இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் யோகி பாபு, சிங்கம்புலி, கருடா ராமு, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இணைகின்றனர்.
இந்நிலையில், சுந்தர் சி- ஹிப் ஹாப் தமிழா ஆதி கூட்டணி 7வது முறையாக 'மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒன்றிணைகின்றனர். ஏற்கனவே ஆம்பள, அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களுக்கு சுந்தர் சி- ஹிப் ஹாப் தமிழா ஆதி கூட்டணி ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இப்படங்களில் வந்த பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.