மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகள்

நடிகர் இயக்குனர் சுந்தர் சி யின் மகள் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார் .
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி முறை மாமன் என்ற படத்தின்மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .முன்னதாக அவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார் .பின்னர் உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி அருணாசலம் ,போன்ற வெற்றி படங்களை இயக்கினார் .பின்னர் அவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .அதன் பின்னர் தலைநகரம் ,அரண்மனை போன்ற படங்களின் மூலம் நடிகரானார் .இந்நிலையில் அவரின் மகள் அனந்திதா டைரக்டர் மணி ரத்தினத்திடம் தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்
அழகு மற்றும் மேக்கப் துறையில் பணியாற்றி வரும் அனந்திதா தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை குஷ்பு தியேட்டரில் உதவி இயக்குனர்கள் வரிசையில் அனந்திதாவின் பெயர் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.எனவே எதிர்காலத்தில் தந்தை சுந்தர் சி போலவே அவரின் மகள் அனந்திதாவும் டைரக்டர் ஆவார் என எதிர்பார்க்கலாம்