'சங்கமித்ரா'-ல் இருந்து வெளியேறிய ஜெயம் ரவி... காரணம் இதுதான் !

jayam ravi

சுந்தர் சி இயக்கவுள்ள 'சங்கமித்ரா' படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காமெடி மற்றும் ஹாரர் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் சுந்தர் சி. நீண்ட நாட்களாக தனது கனவு படமான ‘சங்கமித்ரா’ என்ற சரித்திர பின்னணிக் கொண்ட படத்தை இயக்க முயற்சித்து வருகிறார். இந்த படம் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என கடந்த மூன்று ஆண்டு முன்பு அறிவிக்கப்பட்டது. 

 jayam ravi

சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவிருந்தனர். ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார். 

jayam ravi

 ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து நிதி சிக்கலால் இப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதத்திற்கு முன்பு இப்படத்தை தயாரிக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் முன் வந்ததது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தை தொடங்க சுந்தர் சி திட்டமிட்டு வருகிறார்.  

இந்நிலையில் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story