"சில விமர்சனங்களை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது "-‘மூக்குத்தி அம்மன் 2" பற்றி சுந்தர் .சி .
சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். பட நிகழ்ச்சியில் சுந்தர்.சி"சிஜி-யை பொறுத்தவரை கிட்டத்தட்ட 400 கலைஞர்கள் வேலை பார்த்துள்ளனர். இது சாதாரணமானது கிடையாது. ஆனால் யூடியூபில் சில விமர்சனங்களை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது.
விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை விஷயமே தெரியாமல் ஏஐ என பேசும்போது தான் மனது வலித்தது. இந்த படத்தில் மொத்தம் 3000 ஷாட்டுகளுக்கு மேல் சிஜி இருக்கிறது. அதில் 15 ஷாட்டுக்குத்தான் ஏஐ-யை பயன்படுத்தினோம். படத்தை பாருங்கள், சிஜி நல்லாயிருந்தால் பாராட்டுங்கள், நல்லா இல்லை என்றால் தட்டிக் கொடுங்கள். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் இந்தப்படம்” என்றார்

