சுந்தர் சியின் மிரட்டலான நடிப்பில் 'தலைநகரம் 2'... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

thalainagaram 2

சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள 'தலைநகரம் 2' படத்தின் ஸ்னீக் காட்சி வெளியாகியுள்ளது. 

 கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ‘தலைநகரம்’. இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை கலக்கும் கேங்ஸ்டராக சுந்தர் சி நடித்திருந்தார். 

 thalainagaram 2

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சுந்தர் சியின் ‘இருட்டு’ படத்தை இயக்கிய வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

thalainagaram 2

இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story