மீண்டும் கேங்ஸ்டராக மிரட்ட வரும் சுந்தர் சி.. ‘தலைநகரம் 2’ ரிலீஸ் அப்டேட்

Thalainagaram2

 சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைநகரம் 2’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் ‘தலைநகரம்’. இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை கலக்கும் கேங்ஸ்டராக சுந்தர் சி நடித்திருந்தார். 

Thalainagaram2

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சுந்தர் சியின் ‘இருட்டு’ படத்தை இயக்கிய வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் பணிகள் நிறைவுபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story