மீண்டும் இணையும் சுந்தர்.சி - விஷால் கூட்டணி...?

மதகஜராஜா வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி-விஷால் கூட்டணி மீண்டும் இணைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. விஷாலுடன் சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். யாரும் எதிர்பாத்திராத வேலையில் பொங்கல் ரேசில் கலந்துகொண்ட மதகஜராஜா ரசிகர்களின் வரவேற்பால் வெற்றி படமாக அமைந்தது.
இதே கூட்டணியில் 2015-ல் ஆம்பள மற்றும் 2019-ல் ஆக் ஷன் திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு முன்பாக எடுக்கப்பட மதகஜராஜா 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இந்த வெற்றியால் கடனில் இருந்த தயாரிப்பு நிறுவனம் உட்பட ஒட்டுமொத்த பட குழுவினரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் சுந்தர் சி- விஷால் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து கலகலப்பு மூன்றாவது பாகத்தை எடுக்கத் சுந்தர் சி திட்டமிட்டிருந்தார். மதகஜராஜாவின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் புதிய படத்திற்காக இதே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உடனடியாக இப்படத்தை தொடங்குவார்களா அல்லது கலகலப்பு படத்திற்குப் பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கபடுமா என்பது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.