சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சுந்தர்.சி.. எந்த படத்தில் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
கோயம்புத்தூரை சார்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னைத் தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு சீரிஸ், அரண்மனை சீரிஸ், தீயா வேலை செய்யனும் குமாரு, ஆம்பள ஆகிய படங்கள் முக்கியமானவை.
2006ல் வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக சுந்தர் சி அறிமுகமானார். சுந்தர் சி உதவி இயக்குனரான இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், ஐந்தாம் படை, முரட்டு காளை, தீ, இருட்டு,அரண்மனை 1,2,3 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி, தலைநகரம் படத்திற்கு முன்பே சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த வாழ்க்கை சக்கரம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணி வண்ணன் இயக்கினார். 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய முறை மாமன் படத்திலும் சிறிய வேடத்தில் தோன்றினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய அருணாசலம் படத்தில் ரஜினியை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராக சுந்தர் சி நடித்துள்ளார்.


