வேட்டையை துவங்கிய சுந்தர்.சி – ‘அரண்மனை 4’ன் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ் பட வில்லன்.

photo

‘நீங்க ஹீரோவா? இல்ல வில்லனா?’ என்ற வசனம் இந்த ஒரு நடிகருக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் எனலாம். ஹீரோ வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அடித்து தூள்கிளப்பிவரும் விஜய் சேதுபதி. தற்போது பிரபல ஹிட் இயக்குநரான சுந்தர்.சியுடன் கைகோர்க்கவுள்ளார்.

photo

சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானஅரண்மனைதிரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனைபடத்தின் மூன்றாம் பாகம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து தற்போது அவர் அந்த ஹாரர் சீரிஸ்ஸின் நான்காம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன..

photo

அதிலும் குறிப்பாக அவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சினிமா பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  கூடுதல் தகவலாக படத்தை லைக்கா நிறுவனம்  தயாரிக்க உள்ளனர். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  

Share this story