மிரட்டலான கேங்ஸ்டர் கதைக்களத்தில் சந்தீப் கிஷன்... தெறிக்கவிடும் 'மைக்கேல்' டிரெய்லர் !

Michael

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைக்கேல்' படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மைக்கேல்'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய்  சேதுபதி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Michael

இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை செளத்ரி தயாரித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Michael

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ‌‌‌‌‌‌இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க இந்த டிரெய்லர் உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story