விஜய் மகன் இயக்கும் படம் குறித்து சந்தீப் கிஷன் பகிர்வு

sandeep

ராயன் படத்திற்கு முன்பே ஜேசன் சஞ்சயும் தானும் இப்படம் குறித்து பேசியதாக சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சந்தீப் கிஷன். தமிழில் மாநகரம், மைக்கெல், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் நிலையில், இசையமைப்பாளராக தமன் எஸ் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சந்தீப் கிஷன், ராயன் படத்திற்கு முன்பே இருவரும் இப்படம் குறித்து பேசியதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'ராயன் படம் வெளியாவதற்கு முன்பே நாங்கள் சந்தித்து ஒன்றாக பணிபுரிய முடிவு செய்தோம். நான் சந்தித்த மிகவும் இனிமையான மற்றும் கடின உழைப்பாளி நபர்களில் ஜேசன் சஞ்சயும் ஒருவர். இப்படத்திற்கு ஆவலாக உள்ளேன். ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார். 

Share this story