தலைவியின் சம்பவம் கன்ஃபார்ம்... 'ஓ மை கோஸ்ட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் யுவன் இயக்கத்தில் தமிழில் முதல்முறையாக சன்னி லியோன் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. த்ரில்லர் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜீஷ் அசோக் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர்கள் சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. சன்னி லியோனின் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

