சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 : டைட்டில் வின்னர் காயத்ரி...!

super singer

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10  நிகழ்ச்சியில் காயத்ரி டைட்டில் வின்னரானார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, ஜூனியர் சீசன் 10-ன் ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி, நேரு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது.இதில், டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை சாரா சுருதி, ஆத்யா என இருவர் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

 gayathiri
இவர்களுக்கு நடிகர் கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பரிசுகளை வழங்கினர். ‘தக் லைஃப்’ படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருவரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. .

Share this story