"எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள்"-சூப்பர் ஸ்டார் பாராட்டிய படம் எது தெரியுமா ?

rajini

ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார் .இந்த படம் இன்னும் சில மாதத்தில் வெளியாக உள்ளது .இந்த படத்தில் நடித்தது குறித்து அவர் மிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ்தான் இப்போது தமிழின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்த மற்ற அனைத்து படங்களுமே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று அவரது மார்க்கெட்டை உயர்த்தி வைத்தன.
சமீபத்தில் கூலி படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுமே  வரவேற்பை பெற்றிருக்கின்றன. முதல் பாடலுக்கு டி.ராஜேந்தர், இரண்டாவது பாடலுக்கு பூஜா ஹெக்டே ஆகியோரை பயன்படுத்தியிருந்தார்கள் அனிருத்தும், லோகேஷ் கனகராஜும். இப்படத்தின்  பாடல்கள்  பெரிதான கவனத்தை ஈர்த்துள்ளது . இதனால் ரசிகர்கள்  மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது: அதேசமயம் டப்பிங் ஸ்டூடியோவில் படத்தை பார்த்த ரஜினிக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம். டப்பிங் பேசி முடித்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து, 'எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள்' என கூறியதாகவும் தெரிகிறது. எனவே இந்த விஷயத்தை கேள்விப்ப்ட்ட ரசிகர்கள் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்

Share this story