“ஒரே சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது” - பிரபல தயாரிப்பாளர் ட்வீட் சர்ச்சை !

sr prabhu

 ஒரே சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். 

தமிழ் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது. நீண்ட நாட்களாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது. இதை ஓபனாகவே சமூக வலைத்தளத்தில் ரஜினி - விஜய் ரசிகர்கள் அடித்துக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. 

sr prabhu

இந்த பிரச்சனைக்கு தூபம் போடுவது போல சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் ஹுக்கும் பாடல் வரிகள் உருவாகியிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ‘ஜெயிலர்’ ஆடியோ விழாவில் பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எனக்கு தொல்லை. அதை சில ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்க சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளராக எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவர் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு படத்திற்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், உடன் நடிப்பவர்கள், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பு மாறுபடும்.

sr prabhu

இதைப் புரிந்துகொள்ளும் தொழில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்குகிறது, ஒட்டுமொத்த சந்தையையும் உயர்த்துகிறது மற்றும் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு இண்டஸ்ட்ரி. அந்தந்த தொழில்களில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தகம் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா இடங்களிலும் ஒரு புதிய விதிமுறையாக மாறும் என்றும், வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ். ஆர்.பிரபுவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக அவர் ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

null




 

Share this story