பேரனுக்காக கோவை சென்ற 'ரஜினிகாந்த்'- ஆர்பரித்த ரசிகர்கள்.

photo

 குடும்ப விழாவிற்காக கோவை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து உற்சாகமாக கத்தி வரவேற்றனர்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து அவரது 171வது படத்திற்காக தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யா-விசாகன் தம்பதியின் குழந்தையின் காதணி விழாவிற்காக கோவை சென்றுள்ளார். விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சென்னையிலிருந்து விமானல் மூலமாக கோவை சென்ற அவரை விமான நிலையத்தில் சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள் தலைவா…. தலைவா… என கத்தி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து கார் மூலமாக சூலூருக்கு புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story