பிரபல இயக்குனரை தட்டித் தூக்கிய சூப்பர் ஸ்டார்.. மிரட்டப்போகும் கூட்டணி !

rajini

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய சினிமாவின் முகமாக உள்ள சூப்பர் ஸ்டார், தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். பல மொழி நடிகர்கள் நடிக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

rajini

இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரின் கதையில் திருப்தியில்லாததால் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அந்த வரிசையில் ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் ஆகியோர் பெயர் அடிப்படுகிறது. 

rajini

இந்நிலையில் ரஜினிகாந்தை இயக்கும் புதிய இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவையே தனது படங்களால் மிரட்டி வரும் லோகேஷ் கனகராஜ் தான் அந்த இயக்குனர் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் ரஜினியை வேறு மாதிரியாக பார்க்கலாம் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

Share this story