புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்... உற்சாகமாக ரசிகர்கள் !

rajini

ஆங்கில புத்தாண்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னார்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று 12 மணி முதல் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்டின் முதல் நாளான இன்று கோவில், தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

rajini

புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு வாழ்த்துக்கள். உன் வாழ்க்கை உன் கையில் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் புத்தாண்டையொட்டி இன்று காலை முதலே ரஜினியை காண அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார். அப்போது வணக்கம் சொல்லி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார். இதனால் ரசிகர்கள் உற்சாகமானர்கள். 

 

 


 

 

 

Share this story