சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாள்!....- குவியும் வாழ்த்துகள்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

photo

தனித்துவமான ஸ்டைல், உடல்மொழி, மாஸ் வசனங்கள் என சினிமாவில் இன்றும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மைய்ய தலைவருமான கமல்ஹாசன், நடிகை குஷ்பு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் பகிர்ந்த பதிவு “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!  மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

photo

கமல்ஹாசன் பதிவில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.” என வாழ்த்தியுள்ளார்.

அண்ணாமலை பதிவில் “இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழ் நாடு பிஜேபி சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.  அடுத்து நடிகை குஷ்பு” தேசத்தின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Share this story