'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்...!

rajinikanth

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.


இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 


 

Share this story