சூப்பர் ஸ்டார் சர்ச்சை.. ரஜினியிடம் விளக்கமளித்த நடிகர் சரத்குமார் !

sarathkumar

சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து நடிகர் சரத்குமார் ரஜினியிடம் விளக்கமளித்துள்ளதாக கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார், ஹீரோ மற்றும குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியான வெளியான ‘வாரிசு’ படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார்,  விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நான் சூர்யவம்சம் படத்தின் 175வது நாள் விழாவிலேயே குறிப்பிட்டதாக கூறினார். 

sarathkumar

சரத்குமாரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ‘பரம்பொருள்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரத்குமார், அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விளக்கத்தை நடிகர் ரஜினியிடம் நான் முன்னரே தெரிவித்துவிட்டேன். ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவதை குறிப்பிடவே விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டேன். ரஜினிகாந்த் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளவேண்டாம் என ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.  

Share this story