புதிய பொலிவுடன் வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் படம்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

baba

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படம் விரைவில் புதிய பொலிவுடன் வெளியாகவுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினியின் சூப்பர் ஹிட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரஜினியே கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். 

baba

இந்த படத்தில் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் மீண்டும் புதிய பொலிவுடன் வெளியாகவுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் தயாராகி வருகிறது. அதேபோன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பை விட பார்ப்பதற்கு விறுவிறுப்பாக படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதால் இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, ரஜினியை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. 

 

 

Share this story