அயோத்தி ராமர் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மனைவியுடன் சாமி தரிசனம் !

rajini

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார். 

‘ஜெயிலர்’ படம் ரிலீசாவதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு சென்றார். அங்கு ரிஷிகேஷ், பாபாஜி குகை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு இமயமலையிலிருந்து கீழே வந்த அவர், உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று அங்கு முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார். 

rajini

நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதையடுத்து இன்று அயோத்திக்கு சென்ற ரஜினிகாந்த், புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

rajini

பின்னர் புதியதாக கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். எனது வேண்டுதல் இன்றுதான் நிறைவேறியுள்ளது. ராமர் விரும்பினால் கோயில் கட்டியதற்கு பிறகு மீண்டும் வருவேன் என்று கூறினார். 

 

Share this story