'குட் பேட் அக்லி' - அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து...!

'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். கூலி படம் குறித்தான கேள்விக்கு, நல்லா போய்டிருக்கு எனப் பதிலளித்தார். ஜெயிலர் 2 படம் தொடர்பான கேள்விக்கு, “இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம். எப்போ முடியும்னு தெரியாது” என்றார்.
#WATCH | "Good Bad Ugly படம் வெற்றி பெற வாழ்த்துகள்"
— Sun News (@sunnewstamil) April 10, 2025
சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி #SunNews | #GoodBadUgly | #Ajithkumar𓃵 | #Rajinikanth pic.twitter.com/z55Nby2Bq5
பின்பு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு “வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்றார். இன்று குட் பேட் அக்லி படம் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.