"சாமி உங்களால் இந்தியாவிற்கே பெருமை...! " : இளையராஜாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசைஞானி இளையராஜாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் தான் உருவாக்கிய முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று (08.03.2025) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் கமல் உள்ளிட்ட பலர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இளையராஜாவை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இன்க்ரிடபிள் இளையராஜா’(#IncredibleIlaiyaraaja) என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளார்.
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) March 8, 2025
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். #IncredibleIlaiyaraaja @ilaiyaraaja @Onemercuri @LiveNationUK
இளையராஜா லண்டன் புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியபோது, “இன்க்ரிடபிள் இந்தியாவைப் போல் இது இன்க்ரிடபிள் இளையராஜா” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.