‘மீனா 40’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அழகான நினைவுகளை பகிர்ந்த பிரபலங்கள் !

meena 40

நடிகை மீனாவின் 40 ஆண்டு திரைவாழ்வை கொண்டாடும் விதமாக ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. 1980-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினியின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர் ரஜினியுடன் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார்.

meena 40

ஜினி மட்டுமல்லாமல் கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவையே கலக்கி வந்தார்.  சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற கணினி பொறியாளரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவன் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதனால் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

meena 40

 இந்நிலையில் மீனாவின் 40 ஆண்டு திரை வாழ்வை கொண்டாடும் வகையில் ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சியில் அவரது நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ராஜ்கிரண் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது மீனா குறித்த பழைய நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். 

meena 40


 


 

Share this story