மாதேஷ்வரர் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம்...!

super star


ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் மாதேஷ்வரர் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் நெல்சன். கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 


இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றார் ரஜினி. வழியில் மாதேஷ்வரர் கோவிலை பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வந்து சாமி தரிசனம் செய்தார்.அப்போது ரஜினி வந்ததை பார்த்ததும் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்தவர்கள் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.


 

Share this story