'பாபநாசம்' படத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன காரணம் தெரியுமா...?

rajini

த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. 


கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம்.  பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தையும் இயக்கினார். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் செய்தனர். முதல் பாகத்துக்கு நிகராக விறுவிறுப்புடன் இருந்த இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் அதன் மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
papanasam
 

இந்த நிலையில், த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளர் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ முதலில் அணுகி உள்ளார். ஆனால் அதில் நடிக்க சூப்பர் ஸ்டார் மறுத்துவிட்டார். அதுகுறித்த காரணத்தை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

rajinikanth

பாபநாசம் படம் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துப் போனாலும், அதில் போலீசிடம் அடிவாங்கும்படியான காட்சி உள்ளது. அப்படி நான் அடிவாங்கும் காட்சியை என்னுடைய ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறிய ரஜினி, இது கமலுக்கு சூப்பராக இருக்கும் என்று சொல்லி கமலிடமே போன் பண்ணி இந்த படத்தில் நடிக்க சொன்னாராம் ரஜினி. அதன்பின்னர் கமல்ஹாசன் நடித்து பாபநாசம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக தனஞ்ஜெயன் கூறினார்.

Share this story