முன்னணி இயக்குநர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... புகைப்படம் வைரல்...!
1742471783442
நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை 'பேட்ட, கூலி, ஜெயிலர்' என தலைப்பிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த 3 படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

