உச்சநீதிமன்றத்தில் தனுஷ் மீதான மனு தள்ளுபடி
1705574828530

தனுஷ் நடித்து 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி இருந்தது. ஆனால், புகை பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என வாகசம் இடம்பெறவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு போடப்பட்டது
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே, இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.