ஓ.டி.டி. விவகாரம் - உச்ச நீதிமன்றம் மறுப்பு

ott

இந்தியாவில் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் தணிக்கை செய்து ஒழுங்கு படுத்த தனி குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஷாஷாங் ஷேகர் ஜா மற்றும் அபூர்வா அர்ஹதியா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் சென்சார் இல்லாமல் வெளிப்படையான கட்சிகள், வன்முறை, போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள், “ஓ.டி.டி.க்கு தணிக்கை செய்து ஒழுங்கு படுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடமுடியாது. அதை அரசு பார்த்துக்கொள்ளும். இதற்கு பொதுநல மனு அவசியமற்றது. தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவையா இல்லையா என்பதை மனுதாரர் சம்பந்தபட்ட துறையில் முறையிடலாம்” என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்கள். 

Share this story