"ரஜினிக்கு பிடித்த கதை இது" -சாருகேசி படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா

ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், ரித்விக் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. அருண்.ஆர் தயாரித்துள்ளார். வெங்கட் எழுதிய கதைக்கு சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தேவா இசை அமைக்க, பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாததால், சத்யராஜ் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். " இப்படத்தில் எனது கேரக்டர் பற்றி சுரேஷ் கிருஷ்ணா சொன்னவுடனே நடிக்க சம்மதித்து விட்டேன். பா.விஜய் எழுதிய வசனங்கள் சிறப்பாக இருந்தது. இதில் மிகச்சிறப்பாக நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது, "ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரன் சாரிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு ரஜினி சார் இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.