கோடிகளை கொட்டிக் கொடுத்து தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்... ‘சூர்யா 42’ குறித்து புதிய அப்டேட்

suriya 42

‘சூர்யா 42’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5 வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

suriya 42

3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

suriya 42

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. பல கோடிகளுக்கு இந்த உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story