தமிழ் புத்தாண்டில் வெளியாகிறதா ‘சூர்யா 42’ ஃப்ர்ஸ்ட் லுக்... சூர்யா படத்தின் புதிய அப்டேட்

suriya 42

 சூர்யாவின் 42வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் 42வது திரைப்படம் இந்திய சினிமாவில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

suriya 42

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் காட்சிகள் கோவா மற்றும் பிஜூ தீவில் அதிக அளவில் படமாக்கப்பட்டது. அதேபோன்று படத்திலிருந்து வெளியாகும் அப்டேட்டுகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

suriya 42

தற்போது இந்த படத்தின் ப்ரோமோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதி தொழில்நுட்பத்தில் ப்ரோமோவிற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோ ஆகியவை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

 

Share this story