ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள்.. ‘சூர்யா 42’ குறித்து லேட்டஸ்ட் தகவல் !

‘சூர்யா 42’ படத்தின் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் இரு பாகங்களாக உருவாகி வருகிறது.
மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தலைமையில் படமாகும் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்திலிருந்து வரும் இந்த அதிரடி அப்டேட்டுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.