பண்டிகை தினத்தில் வெளியாகும் ‘சூர்யா 42’... நாளை வெளியாகும் மிரட்டலான அறிவிப்பு !

suriya 42

சூர்யாவின் நடிப்பில் உருவாகும் 42வது படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் மாஸாக உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’. சூர்யாவின் மற்ற படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு இந்திய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. அதனால் தான் இந்த படத்தின் ஒவ்வொரு உரிமையும் பல கோடிக்கு வியாபாரமாகி வருகிறது. 

suriya 42

 சூர்யா 42' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.  ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகிறது. இந்நிலை​யில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. அதோடு படத்தின் தலைப்பு நாளை காலை 9.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story