தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்... புதிய படத்தின் அப்டேட்

suriya 43

நடிகர் சூர்யா 43வது படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘சூரரைப்போற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். தற்போது இந்தியில் ‘சூரரைப்போற்று‘ படத்தின் ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா அந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு சூர்யாவின் படத்தில் இணையவுள்ளார். அதேநேரம் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

suriya 43

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் பல நடிகர்கள் இந்த படத்தில் இணையவுள்ளனர். 

suriya 43

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story