'சூர்யா 44': வெளிநாட்டு நடிகர்கள் நடிப்பதில் சிக்கல்

suriya 44
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்தமானில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட ரஷ்ய நடிகர்கள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில், சில ரஷ்ய நடிகர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் மீதியுள்ளவர்கள் நீலகிரியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், சூர்யா 44 படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் நடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, சுற்றுலா விசாவில் வெளிநாட்டவர்கள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, நீலகிரி மாவட்ட தனிப் பிரிவு போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால், இப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this story