'சூர்யா 44' டைட்டில் டீசர் அப்டேட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

surya 44

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கிறிஸ்துமஸ் பரிசாக இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

Share this story