சூர்யா பிறந்தநாள் : அப்டேட் கொடுத்து அலற விட்ட சூர்யா 44 படக்குழு

suriya

நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்தார். சூர்யா 44 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கடந்த மாதம் சூர்யா 44 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி அதில் சூர்யாவின் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  வீடியோவில் அவரது கெட்டப்பை பார்க்கும்போது இப்படத்தில் சூர்யா கேங்ஸ்டராக நடிப்பதாக கணிக்கப்பட்டது. 

Suriya

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி புதிய கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



 '

null



 

Share this story