சூர்யா 44 படத்தின் அப்டேட் : நள்ளிரவு 12.12 வெளியாகிறது

suriya

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்தார். சூர்யா 44 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் சூர்யா 44 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் சூர்யாவின் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கிலிம்ப்ஸ் வீடியோவில் அவரது கெட்டப்பை பார்க்கும்போது இப்படத்தில் சூர்யா கேங்ஸ்டராக நடிப்பதாக கணிக்கப்பட்டது. 

Surya 44

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ‘சூர்யா 44’ படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ‘சூர்யா 44’ படத்தின் பெயர் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

Share this story