'சூர்யா 45' படத்தின் புதிய அப்டேட் என்ன தெரியுமா...?

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்குகிறது
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் மேலும் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்க உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகளும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.