‘சூர்யா 45’ பட பூஜை வீடியோ இணையத்தில் வைரல்
சூர்யா 45 படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் உருவாகப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
#Suriya45 - Kickstarted..🔥✅ DOP - Gk Vishnu..😲👌 Vera level Visuals loading..🔥⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) November 27, 2024
pic.twitter.com/3o0wq59XSl
மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 27) இந்த படத்தின் பூஜை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் வைத்து நடைபெறுகிறது. இந்த பூஜை விழாவில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யா படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.