திருவிழா செட்டப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ‘சூர்யா 45’ பாடல் காட்சி..!

‘சூர்யா 45’ படத்துக்காக விரைவில் சூர்யா மற்றும் த்ரிஷா பங்குபெறும் பிரம்மாண்ட பாடல் காட்சிபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்காக விரைவில் பிரம்மாண்ட அரங்கில் பாடலொன்றை படமாக்கவுள்ளார்கள். இதில் சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் பங்கேற்று நடனமாட இருக்கிறார்கள். இதற்காக திருவிழா அரங்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்பாடலில் சூர்யா - த்ரிஷா உடன் 500-க்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இப்பாடல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்பாடலுக்கான நடன அமைப்புகளை ஷோபி மேற்கொள்ளவுள்ளார்.